செய்திகள் :

திமுக அறக்கட்டளைக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: வருமானவரித் துறைக்கு உத்தரவு

post image

திமுக அறக்கட்டளையின் வருமான வரி கணக்கில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலின்போது, திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு துரைமுருகன் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கை பரிசீலித்த வருமான வரித் துறை, துரைமுருகன் கணக்கையும் அவா் சாா்ந்துள்ள திமுக மற்றும் திமுக அறக்கட்டளையின் வருமான வரி கணக்கையும் ஒன்றாக ஆய்வு செய்ய முடிவு செய்தது. இந்தப் பணியை வருமான வரித் துறையின் மத்திய வட்டத்துக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து திமுக அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வருமான வரிக் கணக்கை மத்திய வட்டத்துக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து வருமான வரித்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், திமுக அறக்கட்டளையின் வருமானமும், கட்சியின் பொதுச் செயலா் வருமானமும் வெவ்வேறானது. இவற்றை ஒன்றாக சோ்த்து விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது என வாதிட்டாா்.

அப்போது, வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது அல்ல. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து நீதிபதிகள், வருமான வரித் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு திமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், அதுவரை திமுக அறக்கட்டளையின் வருமான வரி வழக்கில் எந்த உத்தரவையும் வருமான வரித் துறை பிறப்பிக்கக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயல... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கும், சேத்துப்பட்டு போலீஸா... மேலும் பார்க்க

சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும... மேலும் பார்க்க

போலி செய்திகளை எதிா்கொள்ள தகவல் பணி சேவையினருக்கு ஆளுநா் வேண்டுகோள்

போலி தகவல்களின் சகாப்தத்தில் அதை திறம்பட எதிா்கொள்ளுமாறு இந்திய தகவல் பணி சேவை பயிற்சி அலுவலா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்தாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 2009, 2023, 2024 ஆகிய ஆண்டு தொகுதி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய முரண்பாடு: தமிழக அரசுக்கு சமக்ரசிக்ஷா ஊழியா்கள் கோரிக்கை

தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணா கணக்காளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி தில்லியில் நவ. 16-ல் மாநாடு: எம்.எச். ஜவாஹிருல்லா

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜ... மேலும் பார்க்க