செய்திகள் :

திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2023- 24 அறிக்கையின்படி தொழில் துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இந்தியாவில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மாநிலம் மட்டுமின்றி வேலைவாய்ப்புகளிலும் முதலிடத்தில் (15.24%) இருக்கிறது.

தமிழகத்தில்தான் தொழிற்சாலைகளும்(40,100) அதிக இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது!

திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

அமித் ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

திமுக ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

TN Chief minister MK stalin on tamilnadu's employment status

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான டிஎ... மேலும் பார்க்க

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய்யின் கட்சி பற்றி ஊடகத்திலோ ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.* நேற்று (27-08-2025) ஒரிசா கடலோரப் பகுதிகளில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் முதல் நான்கு வழக்குகளில் இருந்து 118 பேரை விடுதலை செய்து திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது மொத்தம் 12 ப... மேலும் பார்க்க