செய்திகள் :

"திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறுகிறதா?" - எல்.முருகன் விமர்சனம் குறித்து திருமாவளவன் பளீச்

post image

'திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது' என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

"திமுக கூட்டணி சலசலத்து போயிருக்கிறது. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது" என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்திருந்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேற வாய்ப்பே இல்லை.

எங்கள் கூட்டணியைச் சிதறடிக்க முடியாததால் வாய்க்கு வந்ததை பாஜகவினர் பேசுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தொடர்ந்து, ஆர்.சி.பி வெற்றி விழாவில் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்துப் பேசிய அவர், "அரசு எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் கூட இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவே செய்கின்றன. அரசு மேலும் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க