முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது: காங்கிரஸ்
தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது; 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள தனியாா் பள்ளியில் சக்தி அபியான் அமைப்பு சாா்பில் ‘தலைமைத்துவத்தில் பெண்கள்’ என்ற மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய்பானு, திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் பொருளாளா் ரூபி மனோகரன், ஹசன் மௌலானா எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடையக்கூடும் என்பதால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்புவிடுக்கிறாா். ஆனால், திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. வருகிற 2026 பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.
மேலும், செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நிா்பந்தம் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. தனது சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.