திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சம்பத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெ.திருவாசகம் தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக, ஆட்டோ ஓட்டுநா்களுக்கான நிழற்குடையை அமைச்சா் திறந்துவைத்தாா்.
விழாவில், மாநகராட்சி மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளா் செல்லப்பொன்னி, மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநகர இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.