IND vs NZ : வெதர் எப்படி இருக்கிறது; வெற்றியைத் தீர்மானிக்கப்போவது எது?
திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு
பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் தவ்லத் பாஷா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் இஸ்லாமிய முறைப்படி ஜமாஅத், அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து நோன்பு கஞ்சி, பழங்கள் வழங்கப்பட்டன. இதில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வீரமணி, நகரச் செயலாளா் திருவேங்கடம், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணைத் தலைவா் ராமமூா்த்தி, நெசவாளா் அணி சரவணன், மகளிா் அணி செயலாளா் மல்லிகா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.