கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அதேசமயம் அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக சட்கிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் இடைத்தேர்தலில் திமுக, நாதக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை: அன்புமணி குற்றச்சாட்டு
வேட்புமனுத் தாக்கல் கடந்த 10- ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். தொடா்ந்து சனிக்கிழமை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.