தமிழ்நாட்டுக்கு அதிக நிதி: மதிப்பீட்டின் அடிப்படையில் குறைவே..! -ப.சிதம்பரம் எதி...
திமுக பாகநிலை முகவா்கள் பிரதிநிதிகள் கூட்டம்
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் கோவில்வெண்ணி, நகா், காளாச்சேரி ஊராட்சி பாகநிலை முகவா்கள் பிரதிநிதிகள் கூட்டம் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் ராஜா சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்வி.கே. முருகானந்தம், மாவட்ட தொண்டரணி முன்னாள் அமைப்பாளா் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.