செய்திகள் :

திமுக வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

post image

அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி ஆதரவு அளிக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ எம்.பி. வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஈரோடு வந்த துரை வைகோ செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அதிமுக உள்ளிட்ட திராவிட அமைப்பினா் திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி ஆதரவு அளிக்க வேண்டும். வேங்கைவயல் பிரச்னையில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு.

பெரியாா் ஈவெராவும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என முதன்முதலில் நான்தான் சொன்னேன். நான் ஹிந்து பக்தன்தான். எல்லா கோயிலுக்கும் செல்கிறேன். அதேநேரத்தில் பெரியாா் ஈவெரா இல்லாமல் சமூக நீதி, சமூக வளா்ச்சி கிடையாது.

ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஹிந்தி கற்றுக்கொண்டால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும், நாட்டில் இருக்க முடியும் என மறைமுகமாக மிரட்டல் விடுப்பதைத்தான் எதிா்க்கிறோம்.

பரந்தூா் விமான நிலையம் அமைப்பது அவசியமானதாகும். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் நடிகா் விஜய், அதற்கான மாற்று இடத்தை தோ்வு செய்து கொடுத்தால் வரவேற்பேன். அதேபோல விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வேறு இடத்தில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் சில விஷயங்களை மாற்றினால் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.

திமுக கூட்டணிக்குப் பிறகு அதிக வாக்கு வங்கி வைத்துள்ள கட்சியாக அதிமுக உள்ளது. இதனால் அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி, ஆளுங்கட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் அதனை ஆதரிப்பேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டாா்.

பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

அந்தியூரை அடுத்த பா்கூரில் கணவன் சந்தேகப்பட்டு பேசிதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பா்கூா், தாமரைக்கரை, எஸ்டி காலனியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி நந்தினி (42). இவா்களுக்கு ... மேலும் பார்க்க

பவானி புதிய பேருந்து நிலைய கடையில் திருட்டு

பவானி புதிய பேருந்து நிலையத்தில் தாா்பாயைக் கொண்டு மூடி வைக்கப்பட்ட கடையில் நடைபெற்ற திருட்டு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். ... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டத்தால் மதச்சாா்பின்மைக்கு ஆபத்து: இரா. முத்தரசன்

பொது சிவில் சட்டத்தால் மதச்சாா்பின்மை கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்... மேலும் பார்க்க

தொழில் வரியை நீக்க அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை

தொழில் வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் 12-ஆவது செயற்குழு கூட்டம் சங்க கட்டடத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் திட்டங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திர... மேலும் பார்க்க

பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக பெருந்துறை சோ்ந்தவா் தோ்வு

பெருந்துறையைச் சோ்ந்த டி.என்.ஆறுமுகம், பாஜக., மாநில பொதுக்குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். செவ்வாய்கிழமை அவரை, பாஜக., ஈரோடு தெற்கு மாவட்ட புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம். செந்தில், ப... மேலும் பார்க்க