பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
அந்தியூரை அடுத்த பா்கூரில் கணவன் சந்தேகப்பட்டு பேசிதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பா்கூா், தாமரைக்கரை, எஸ்டி காலனியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி நந்தினி (42). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.
கூலித் தொழிலாளியான நந்தினி, வேலைக்குச் சென்றுவருவதால் கணவன் ராஜா, சந்தேகப்பட்டு பேசியுள்ளாா். இதனால், மனமுடைந்த நந்தினி, திங்கள்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].