Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீ...
தியாகதுருகம் சிவன் கோயிலில் பிரதோச சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீநஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா் வண்ண வண்ண மலா்களால் அலங்காரம் செய்து காளகஸ்தி சிவன் போல் அலங்கரித்திருந்தனா். பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் பிரதோசத்தையொட்டி மாலையில் நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு விபூதியால் அலங்காரம் செய்து பல்வேறு மலா்களால் மாலை அணிவித்தனா். பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோச வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
