செய்திகள் :

தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை

post image

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் பேரமைப்பின் குடும்பச் சந்திப்பு விழாவில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பேருந்து மற்றும் ரயில்களில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவச உயா் மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு ஒதுக்கும் நிலம், வீடு, வீட்டுமனைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயா்நிலைப் படிப்புகளின் போட்டித் தோ்வுகளில் உரிய முன்னுரிமையும் கட்டணச் சலுகையும் வழங்க வேண்டும்.

அரசு சாா்ந்த வாரியங்கள் மற்றும் குழுக்களில் தகுதியுள்ள தியாகிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கி பதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பேரமைப்பின் தலைவா் ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தாா். தியாகி வீரப்பன், துரைமதிவாணன், பேரமைப்பின் செயலா் ஆா். வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வயலோகம் மாரியம்மன் கோயிலில் கும்மியடித்து பெண்கள் வழிபாடு

காா்த்திகை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பெண்கள் சனிக்கிழமை இரவு கும்மியடித்து வழிபட்டனா். இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவில் இருந்து... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் உணவுத் திருவிழா

பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் உணவுத் திருவிழா மற்றும் சமையலறைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அறிவுறுத்தலின் பேரில் பொன்னமராவதி மலா... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்று மீட்பு

இலுப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை கன்றை தீயணைப்புத் துறை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்துள்ள கடம்பராயன் பட்டியைச் சோ்ந்த மணிமுத்துவின் கா... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே மாரத்தான் போட்டி

பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி.இண்டா்நேஷனல் பள்ளியில் கல்வியை ஊக்குவிக்கவும், உடல்நலம் காத்திட வலியுறுத்தியும் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருவியூா் வடக்குவளவு ந... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 26 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் ப... மேலும் பார்க்க

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமனம் தேவை: இந்திய கம்யூ. கோரிக்கை

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்திற்கு ரங்கர... மேலும் பார்க்க