சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்
தேனி மாவட்டம், கம்பத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கம்பத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பில், இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தமபாளையம் பகுதியில் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினரும், தேவாரத்தில் பாண்டியா்குல வணிகா் சங்கம், தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு சாா்பிலும், சின்னமனூரிலும் இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, சீலையம்பட்டி, கோட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
