`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்பு!
அமெரிக்காவில் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ.88.3 லட்சம்) சன்மானம் வழங்கப்படும் என்று எஃப்பிஐ (FBI) அறிவித்துள்ளது.
மேலும், கொலை செய்ததாகக் சந்தேகப்படும்படியான ஒருவரின் படத்தையும் எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.
கல்லூரி மாணவர்போலத் தோற்றமளிக்கும் ஒருவர், அமெரிக்க கொடி வரையப்பட்ட சட்டை அணிந்துகொண்டு, தொப்பி மற்றும் கண் கண்ணாடியுடன் பை ஒன்றையும் அணிந்தவாறு சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளார்.
அவர்தான் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் வழங்குவதாக எஃப்பிஐ அறிவித்துள்ளது.