செய்திகள் :

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

post image

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் திராவிட மாடல் தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விண்வெளித் தொழில் கொள்கை 2025. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கானத் திட்டமிடல்களும் தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் IIT Madras startupஆன Agnikul உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ்நாட்டு நிறுவனங்களுடன் இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் அடுத்த பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் மகத்தான முயற்சிக்கான launch padஆக விண்வெளித் தொழில் கொள்கை 2025 அமைந்துள்ளது. ஆனால் தமிழ் நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல். எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்திற்கும் இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு இந்த வீனர்கள் கொடுக்கும் பரிசா இது. கீழ்த்தரமாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது சேற்றை அள்ளி வீசும் அற்பர்கள் தங்களது கேவலமான அரசியல் போக்கை நிறுத்துவது நல்லது.

அதே போல நம்மை பார்த்து copy அடித்து குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது. அப்போது அது அடிமைகளின் முதலாளிகளின் நண்பர்களுக்காகவா ? தமிழ்நாடு அவர்களை விட சிறப்பான ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா ?

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

தமிழ்நாட்டில் எந்தவொரு நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இந்த விண்வெளித் தொழில் கொள்கையை விமர்சித்து கொச்சைப்படுத்துவதாக நினைத்து ஐ.ஐ.டி. வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களின் இளந்தமிழர்கள், வேலை வாய்ப்பு பெறவிருக்கும் மகளிர்-இளையோர் ஆகியோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும்.

ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க