செய்திகள் :

திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!

post image

இயக்குநர் பிரேம் குமார் திரில்லர் கதை ஒன்றை எழுதிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

தற்போது, 96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால், நடிகர்களின் தேர்வு குழப்பங்களால் அப்படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட பாடகி சின்மயி, இயக்குநர் பிரேம் குமாருக்கு அழைத்து, “96 - 2 அப்டேட் கொடுங்க” எனக் கேட்டார்.

இதற்கு, பிரேம் குமார், “96 - 2 படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதிவிட்டேன். ஆனால், அப்படம் கொஞ்சம் தாமதமாகும். இப்போது, திரில்லர் கதை ஒன்றை எழுதிவருகிறேன். இது, நல்ல விறுவிறுப்பான கதையாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் அடுத்ததாகத் திரில்லர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?

நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி

பாடகி ஜோனிடா காந்தி தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். இந்தியளவில் பிரபலமான பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. கனடாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியர் என்பதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி... மேலும் பார்க்க

38 வயதில் ஆட்ட நாயகன் விருதுபெற்ற கோல்கீப்பர்: யார் இந்த ஆஸ்கர் உஸ்தாரி?

கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அசத்திய 38 வயது கோல்கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இன்டர் மியாமி அணியும் அல்-அஹ்லி அணியும் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அண... மேலும் பார்க்க

குப்பை! மணிரத்னத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

முத்த மழை பாடலின் விடியோவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியான... மேலும் பார்க்க

டிரெண்டிங்கில் மிஷ்கின் பாடிய பாடல்!

லவ் மேரேஜ் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் பாடிய பாடல் கவனம் பெற்று வருகிறது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.படத்தின் ... மேலும் பார்க்க

கைதி - 2 படத்தில் அனுஷ்கா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி - 2 படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெ... மேலும் பார்க்க

லவ் யூ தலைவா..! ரஜினியிடம் வாழ்த்து பெற்ற டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர்!

டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபே... மேலும் பார்க்க