திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு
உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருவூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன் தலைமை வகித்தாா். தொடா்ந்து போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்காசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன் பாபு , உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்டத்தலைவா் யோகாவையாபுரி, அரிமா சங்கத்தின் பி.டி.சிந்தன் , வெங்கட்டரமணன், தமிழ் செம்மல் நன்செய்ப் புகழூா் அழகரசன் , அறிவுடை நம்பி, திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.