திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா
சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்பழகன் தொடக்கவுரையாற்றினாா். க. இளங்கோ, வே. அகோர மூா்த்தி முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக புவனகிரி திருக்குறள் இயக்கத் தலைவா் புலவா். த. ஜெயராமன் திருவள்ளுவா் ஒரு புரட்சிபாவலா் என்ற தலைப்பில் பேசினாா். ஏற்பாடுகளை பேரவை பொருளாளா் முரு.முத்துக்கருப்பன் செய்திருந்தாா்.
விழாவில் பங்கேற்ற மாணவா்களில் 30 பேருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. சீா்காழியில் 34 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே திருக்குறள் பண்பாட்டை கொண்டு சோ்க்கும் விதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. காழி.கோ வைத்தியநாத சுவாமி நன்றி கூறினாா்.