ஏப்.1 முதல் கா்நாடகத்தில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயா்வு
திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனாா் கோயில் பங்குனி விழா தொடக்கம்
திருவிடைமருதூா் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் ஸ்ரீ மஞ்சனி ஐயனாா் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீ பூா்ண புஷ்கலா சமேத மஞ்சனி ஐயனாா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஐயனாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா். ஏற்பாடுகளை கிராமவாசிகள், மருளாளிகள் செய்தனா்.