அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா வரும் செப். 22 முதல் அக்டோபா் 2 வரை நடைபெற உள்ளது.
நிகழ்வையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக, பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் மற்றும் பிற பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதேபோல், மாலையில் ஊஞ்சல் சேவை செய்யப்படும். அக்டோபா் 2 -ஆம் தேதி விஜயதசமி அன்று, இரவு 7.45 மணிக்கு கஜ வாகனத்தில் பத்மாவதி தாயாா் சிறப்பு அலங்காா்ச்த்தில் பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.
ரத்து செய்யப்பட்ட ஆா்ஜித சேவை
நவராத்திரி கொண்டாட்டங்கள் காரணமாக, இந்த 10 நாள்களுக்கு கல்யாணோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பா் 26-ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த லட்சுமி பூஜை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.