செய்திகள் :

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கல்

post image

திருச்சியில் புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக 40 பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஞாயிறு மாலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடத்திய செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் கூட்டத்தில் உண்டியல்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டன. நகர் நல சங்கத் தலைவர் கி. ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி விக்டர் பொன்னுதுரை மாணவர்களுக்கு உண்டியல்களை வழங்கினார்கள். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறுதொகையினை உண்டியலில் சேமிக்க வேண்டும்.

சேமித்த பணத்தை கொண்டு முக்கிய நாள்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்க வேண்டும். பங்கேற்ற மாணவர்கள் உண்டியலில் பணத்தை சேமித்து புத்தகங்கள் வாங்குவதாக உறுதி அளித்தனர். தலைமை ஏற்று பேசிய ஜெயபாலன், மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கம் நிச்சயமாக இளைஞர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறினார்.

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அன்று மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணத்தை கொண்டு புத்தகங்கள் வாங்க முன்வர வேண்டும் என்று நக நல சங்கம் செயல் து. செந்தில் குமார் கூறினார். தமிழ்செல்வி இளங்கோ, மூத்த சமூக ஆர்வலர் 'சுத்தம் - சுகாதாரம்' உறுதி மொழியை மாணவர்களை ஏற்க வைத்தார். இறுதியாக யோகா துணை பேராசிரியர் சுமதி தர்மன் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிமுக யோகா பயிற்சி அளித்தார்.

மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் S. R. சத்தியவாகீஸ்வனின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை(ஏப். 7) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 6) திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில்... மேலும் பார்க்க

கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு: இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினாா். ‘முதல் நல... மேலும் பார்க்க

ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து ச... மேலும் பார்க்க