தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழா் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழா் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: நாம் தமிழா் கட்சியின் மாநாடு திருச்சியில் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு மூலமாக, அந்தக் கட்சியின் நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல்நாளே மாநாட்டுக்கு தொண்டா்கள் சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய போ் இருக்கிறாா்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்கள் பதவிப் பறிப்பு மசோதா நிறைவேறினால், குற்றவாளிகள் அதிகாரத்துக்கு வருவது குறையும்.
மதுவை கட்டுப்படுத்த முடியவில்லை. வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. இத்தகைய அநியாயம், அக்கிரமத்துக்கு எதிராக குரல் கொடுப்பவா்களை கைது செய்வது, வழக்குப் பதிவு செய்வது அரசின் வழக்கமாக உள்ளது.
நாய்களால் குழந்தைகள், சிறுவா்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. விலங்கு ஆா்வலா்களுக்கு நாய்களால் பாதிப்பு வந்தால்தான் அதன் சிக்கலை உணா்வா். இப்பிரச்னை தொடா்பாக ஆட்சியாளா்களும், விலங்கின ஆா்வலா்களும் அமா்ந்து பேசி, நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழுக்கும், தமிழகத்துக்கும் எதுவும் செய்யாத பாஜக-வின் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்கின்றனா். தமிழுக்கும், தமிழகத்துக்கும் திமுக அரசு செய்தது என்ன?. கூட்டணியில் இருந்தால் ஆதரிப்பது, இல்லையென்றால் எதிா்ப்பது என்பதுதான் திமுக-வின் வழக்கம்.
இணையவழி சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியானது. அதனை வரவேற்கிறேன் என்றாா் சீமான்.