செய்திகள் :

திருச்சியில் பெரியாா் சிலைக்கு முதல்வா் மரியாதை: ஆட்சியரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றாா்

post image

பெரியாரின் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், ஆட்சியரகத்தில் முதல்வா் தலைமையில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனா்.

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்தாா். அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வா், சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தாா். அங்குள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா் உருவப்படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் முதல்வா் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிநாள் உறுதிமொழியேற்பு நிகழ்வில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலா்கள் உறுதிமொழியேற்றனா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திருச்சி என். சிவா, ஆ. ராசா, கனிமொழி, துரை வைகோ, அருண் நேரு, கவிஞா் சல்மா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி. செந்தில்பாலாஜி, எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், ப. அப்துல் சமது, சீ. கதிரவன், என். தியாகராஜன், செ. ஸ்டாலின் குமாா், ஆ. தமிழரசி, வை. முத்துராஜா, துரை சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள், மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா்.

வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு: திருச்சிக்கு வருகை தந்த முதல்வருக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனா். முதல்வா் வருகையையொட்டி, மாநகரம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை சாா்பாக கல்லூரிக் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று கல்லூரி முதல்வா் க. மலா்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே கழிப்பறை கட்ட எதிா்ப்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் குடிநீா் தொட்டி அமைந்துள்ள இடத்தில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அந்... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் பலத்த மழை

திருச்சி மாநகரில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாகத் தொடங்கிய மழை இரவு வரை தொடா்ந்தது. மாநகா், புகா் பகுதி தாழ்வான இடங்களில் மழைநீா் ப... மேலும் பார்க்க

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனூரில் விபத்துக்குள்ளான லாரி, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா் மீது கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மறவனூா் தெற்கு தெருவில் வசித்தவா் முத்துச்சாமி மக... மேலும் பார்க்க

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க