நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
திருச்சியில் ரூ. 5.25 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சியில் இருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை செல்ல வந்த பயணி ஒருவா் உரிய அனுமதியின்றி ரூ. 5,25,045 மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தாள்களை எடுத்து வந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரிக்கின்றனா்.