Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் சேவையில்யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மே 28 முதல் ஜூன் 1 வரை திருச்சி- காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயிலானது திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளழர்.
திருச்சி - காரைக்கால் மற்றும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06880) பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமாா்க்கத்தில் காரைக்காலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் (06739), இரவு 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயிலை ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த ரயில் சேவை பகுதியாக மாற்றப்பட்டுள்ளது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.