ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்..!
பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்ததுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2, சலார் ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ளத ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகராக இருக்கும் ஹிருத்திக் ரோஷன் கிரீஷ் 4 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருப்பதை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹொம்பாலே ஃபிலிம்ஸின் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஹிருத்தி ரோஷன் நடிகராக நடிக்கிறாரா அல்லது இயக்குநராக அறிமுகமாகிறாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து ஹொம்பாலே ஃபிலிம்ஸ் கூறியதாவது:
அவரை மக்கள் கிரேக்க கடவுள் என்பார்கள். நமது இதயங்களை வென்ற, எல்லைகளை நொறுக்கிய குறிப்பிடத்தக்க நடிகர் அவர்! ஹிருத்திக் ரோஷனை பெருமையுடன் ஹொம்பலே ஃபிலிம்ஸுக்கு வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
They call him the Greek God. He's ruled hearts, shattered limits and we see the phenomenon he truly is!
— Hombale Films (@hombalefilms) May 28, 2025
We are proud to welcome @iHrithik to the @hombalefilms family for a collaboration, years in the making. A tale of grit, grandeur and glory is set to unfold, where intensity… pic.twitter.com/ZU2FHKjKdm