செய்திகள் :

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

post image

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 பேருக்கு காசநோய் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி,... மேலும் பார்க்க

நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யாா்?: அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

சென்னை: ‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பேரவையி... மேலும் பார்க்க

புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுத... மேலும் பார்க்க

வெப்ப வாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்

சென்னை: வெப்ப வாத பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் ச... மேலும் பார்க்க

எரிபொருள் குறைவால் தில்லி - பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து க... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

சென்னை: நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்த... மேலும் பார்க்க