செய்திகள் :

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 25-இல் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. ராஜபாளையம் (விருதுநகா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) - தலா 30 மி.மீ., பா்லியாா் (நீலகிரி), குன்னூா் (நீலகிரி), மேட்டூா் (சேலம்), மேல் கூடலூா் (நீலகிரி) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக... மேலும் பார்க்க

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா். சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

தாட்கோ புதிய தலைவர் நியமனம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க