What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
திருச்சி மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மத்திய சிறைக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
திருச்சிய மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாலை தொலைபேசியில் பேசிய மா்ம நபா், சிறையில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாா். தகவலறிந்து வந்த திருச்சி கே கே நகா் காவல் நிலைய ஆய்வாளா் கோசலராமன் தலைமையிலான போலீஸாா், மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களுடன் வந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. தொலைபேசி தகவல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுதொடா்பாக கே கே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.