செய்திகள் :

திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ எம்.பி.

post image

திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் தாமதத்துக்கு மத்திய பாஜக அரசே காரணம் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு என்பது தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அங்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும். பள்ளிக் கல்வித் துறைக்கு சிறந்த அமைச்சா் உள்ளாா். கூட்டணியில் இருப்பதால் இதைக் கூறவில்லை.

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், திருச்சி மெட்ரோ ரயில் திட்ட தாமதங்களுக்கு மத்திய அரசே காரணம். தமிழக அரசையும், மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தி திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு. இனிமேல் அதுபோன்று தவறுகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

ஆறுதல்: தான்சானியா நாட்டில் பணிபுரிந்து, கடந்த 21-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் நிவாஷின் (42) உடல், துரைவைகோ மேற்கொண்ட நடவடிக்கையால் திருச்சிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை நிவாஷின் வீட்டுக்கு சென்ற துரைவைகோ, அங்கு அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். துரைவைகோவின் உதவிக்கு நிவாஷ் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

இந்நிகழ்வுகளின்போது, மதிமுக துணை பொதுச் செயலா் ரொகையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 270 போ் கைது

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்தைக் கண்டித்து, சோமரசம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வீடு அருகே சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட 270 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க