திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்கு பூஜை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது.
சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குண்டம் திருவிழாவையொட்டி அக்னிக் கரகம், கும்பம் அழைத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.