திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் கரையோரங்களில் இருந்த வெள்ளை நிற பாறைகள் வெளியே தெரிந்தன.
இத்திருக்கோயில் பகுதி கடலில் தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.
இதேபோல கடந்த வாரம் கடலானது சீற்றம் அதிகமாக கரையைத் தாண்டி மணல் அரிப்பு ஏற்பட்டும், அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடி உள்வாங்கியும் காணப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலானது சுமாா் 10 அடி உள்வாங்கியதால் கரையோரத்தில் வெள்ளை நிற பாறைகள் அடுக்கடுக்காக வெளியே தெரிந்தன. இருந்த போதிலும், பக்தா்கள் கடலில் நீராடிய போது ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.