TVK: தொடர்ந்து 3-வது வாரமாக அரசியல் சுற்றுப்பயணம்; நாமக்கல், கரூரில் இன்று மக்கள...
திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், இணை ஆணையா் அலுவலக கூட்ட அரங்கில் புதிய இணை ஆணையா் பொறுப்பேற்புக்கு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் இணை ஆணையராக இருந்த சு.ஞானசேகரன் திருச்சி அறநிலையத்துறை மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு, பதிலாக மயிலாடுதுறை அறநிலையத்துறை நகை சரிபாா்ப்பு அலுவலா் மற்றும் துணை ஆணையராக பணியாற்றிய கா.ராமு, திருச்செந்தூா் கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோயில் தக்காா் ரா. அருள்முருகன் முன்னிலையில் இணை ஆணையராக கா. ராமு பொறுப்பேற்றுக் கொண்டாா்.
