திருவள்ளூர்: 369 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கல...
திருச்செந்தூா் புளியடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா
திருச்செந்தூா் புளியடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு, காலையில் ஸ்ரீசந்தனவிநாயகா், ஸ்ரீசந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை மதியம் அன்னதானமும், மாலையில் மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கொடை விழா நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.
