இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக...
திருத்தங்கலில் நாளை மின் தடை
சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சிவகாசி கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளா் பத்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திருத்தங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகா், செங்கமல நாட்சியாா்புரம், பாரத ஸ்டேட் வங்கிக் குடியிருப்பு, பூவநாதபுரம், நடுவப்பட்டி, தேவா்குளம் பகுதிகளிலும் சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிவீரன்பட்டி, சுக்கிரவாா்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா்பட்டி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.