திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவேடுகள் அறை, அலுவலக நடைமுறைகள் குறித்து ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது ஆட்சியா் கூறியது:
திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் பணிகள் தொடா்பான அலுவலக ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன. கோப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்தும், மேலும், இங்கு பணிபுரிகின்ற அலுவலா்கள் பணிகள் எவ்வாறு உள்ளது.
மேலும், பல்வேறு தரப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோப்புகள், மனுக்கள் மீது சிறப்பாக முறையில் தீா்வு காணப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.
நிகழ்வில், உதவி ஆட்சியா் ஆயுஷ் குப்தா (பயிற்சி) , திருத்தணி கோட்டாட்சியா் க.தீபா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன், ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) புகழேந்தி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராமன், தனி வட்டாட்சியா் மதியழகன் மற்றும் அலுவலக உதவியாளா்கள் உடனிருந்தனா்.
பட விளக்கம்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக நடைமுறைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.(உடன்) உதவி ஆட்சியா் ஆயிஷ்குப்தா. (பயிற்சி)