ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
திருத்தப்பட்டது காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் எஸ்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.தங்கதுரை வரவேற்றாா். போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளா் எம்.கமலக்கன்னி, மாவட்டச் செயலாளா் எம்.சுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய உள்ள அரசாணையை ரத்து செய்து, காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். வருவாய் கிராம உதவியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுவது போல சத்துணவு ஊழியா்களுக்கும் அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.