செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புகழூா் கதவணை திறக்கப்படும்: முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் பேச்சு

post image

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புகழூா் கதவணைதிறக்கப்படும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் வேலாயுதம்பாளையத்தில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இளைஞரணி செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் சரவணன், புகழூா் நகரச் செயலாளா் கே.சி.எஸ்.விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பங்கேற்று பேசியது, கரூா் மாவட்டத்தில் அதிமுகவினா் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டா் சட்டத்தில் கைது செய்யப்படுகிறாா்கள். இதுபோன்ற வழக்குகளை கண்டு அஞ்சமாட்டோம். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புகழூா் கதவணை கட்டுமான பணியை தற்போது காலம் தாழ்த்தி வருகிறாா்கள். 2026-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் புகழூா் கதவணை முழுமையாக கட்டித் திறக்கப்படும் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க

புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம்(சிபிஎஸ்) சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம்

கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னமநாயக்கன்பட்டி, ரெங்கநாதபுரம், ம... மேலும் பார்க்க

ஓய்வூதியப் பலன்கள் கோரி கரூரில் சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மா... மேலும் பார்க்க

வீரராக்கியத்தில் குகைவழிப் பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் குகைவழிப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணராயபுரம் சட்டப... மேலும் பார்க்க