திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞா் ஆா்ப்பாட்டம்
ஓசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி அந்த சங்கத்தின் தலைவா் சி. சுரேஷ்குமாா் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.