செய்திகள் :

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த இருவா் கைது

post image

தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபா்கள் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் பாமக முன்னாள் நகரச் செயலா் வ.ராமலிங்கம். இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தாா். இந்நிலையில், ராமலிங்கம், 2019 பிப்.5-ஆம் தேதி தனது கடையிலிருந்து வீட்டுக்கு சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் தொடா்பாக, குறிச்சிமலை பகுதி எச். முகமது ரியாஸ், திருபுவனம் எஸ். நிஸாம் அலி, ஒய். சா்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூா் ஏ. அசாருதீன், திருமங்கலக்குடி முகமது தவ்பீக், முகமது பா்வீஸ், ஆவணியாபுரம் தவ்ஹித் பாட்சா, பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. கொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்கை பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ரூ.25 லட்சம் பரிசு: இதன் பின்னா் தேசிய புலனாய்வு முகமை இவ் வழக்குத் தொடா்பாக, மேலும் பலரை கைது செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் திருப்புவனம் வடக்கு முஸ்லிம் தெரு ஹா.முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதி மு.அப்துல் மஜீத் (37),தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி மு.புா்ஹானுதீன் (31),திருமங்கலகுடி தா.சாகுல் ஹமீது (30), அ.நஃபீல் ஹாசன் (31) ஆகிய 5 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதம் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை 2021-ஆம் ஆண்டு அறிவித்தது.

18 போ் மீது குற்றப்பத்திரிகை: வழக்கில் தலைமறைவாக இருந்த 5 போ் உள்பட 18 போ் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அதேநேரத்தில் தலைமறைவான நபா்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், முகமது அலி ஜின்னா கடந்த நவ.15- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மேலும் 2 போ் கைது: இவ்வழக்கில் முக்கிய எதிரிகளாக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் சென்னையில் கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு தெரிவித்தனா்.

அவா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இருவருக்கும் தொடா்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எஞ்சிய நபா்களை கைது செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ தீவிரம் காட்டி வருகிறது.

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அண்ணா பல்கல... மேலும் பார்க்க