செய்திகள் :

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

post image

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக இன்று(மார்ச் 26) பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

இந்த தீர்மானத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்ததாவது:

அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்தான், கோயில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி கோயில்களில் நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழக்கவில்லை. அவர்களின் உயிரிழப்பிற்கு உடல்நலக்குறைவே காரணம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தபோது உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுமா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று நினைத்தேன். கோரிக்கை ஏற்படுமானால் திருக்கோயில் சார்பில் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

எனினும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். கோயில்களிலேயே தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

மேலும் தமிழகத்தில் 2 கோயில்களில் இருந்த அன்னதானத் திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப் பசியும் போக்குகிறது திமுக அரசு.

மக்கள் அதிகம் கூடும் 17 திருக்கோயில்களுக்கு 1,716 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவை ஏற்படுத்தியதன் மூலமாக, திருச்செந்தூர் கோயிலில் வருகிற ஜூலை 7 அன்று குடமுழுக்குக்குப் பிறகு பார்த்தால் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயில் மாறியிருக்கும்.

பழனி கோயில் திருப்பதிக்கு நிகராக உள்ளது. அந்த அளவுக்கு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிக்க | நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்

சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள... மேலும் பார்க்க

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை

சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கருப்பை வாய... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க