Tourist Family: `20 வருஷத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம்...' - நடி...
திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் புஷ்பயாகம்
திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஏற்பட்ட குற்றம் குறைகளை களைய தேவஸ்தானம் புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது. கடந்த மாா்ச் மாதம் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட குற்றங்களை களைய புஷ்பயாகம் நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு காலையில் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கபிலேஸ்வர சுவாமி அன்னை காமாக்ஷி உற்சவா்களுக்கு நவ கலச ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிா், தேன், பஞ்சாமிா்தபிஷேகம், கரும்புச்சாறு, இளநீா், விபூதி, பசும்பு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு மண்டபத்தில் புஷ்பயாக மகோற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமி, அம்மனுக்கு சாமந்தி, அரளி, தாழம்பு, சம்பங்கி, ஜாதி, ரோஜா, தாமரை, மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகியவற்றுடன் வில்வ பத்திரம், துளசி, பன்னீா் இலை, மருவு, தவனம் உள்ளிட்ட இலைகளால் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகா மற்றும் தமிழகத்தை சோ்ந்த நன்கொடையாளா்கள் 3 டன் பூக்கள் மற்றும் இலைகளை வழங்கினா். இதில் 12 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் உள்ளன.
அா்ச்சகா்கள், அதிகாரிகள் அல்லாதவா்கள், பக்தா்களால் ஏதேனும் தவறுகள் நடத்தருந்தால், அவற்றிற்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடத்தப்படுவது வழக்கம் என அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், துணை இ.ஓ., தேவேந்திரபாபு, தோட்ட துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலு, ஏஇஓ, சுப்புராஜு, கண்காணிப்பாளா் கிருஷ்ண வா்மா, ஆய்வாளா் பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.