செய்திகள் :

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் உற்சவா் சிலை மாா்ச் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதை முன்னிட்டு திங்கள்கிழமை ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகள் ஊா்வலமாக தேவலாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், ஸ்ரீ கெங்கையம்மன், துா்கையம்மன், ஐய்யப்பனுக்கு புதிய தங்கக் கவசம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து 508 திருவிளக்கு பூஜை, மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கெங்கையம்மன் கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்த... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் த... மேலும் பார்க்க