Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடம் ஆம்பூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியக்கோடி வரவேற்றாா். அமைச்சா் எ.வ.வேலு கட்டடத்தை திறந்து வைத்தும், பள்ளி வளாகத்தில் ரூ. 2.05 கோடி மதிப்பில் மாணவிகளுக்கான விடுதி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டியும் பேசுகையில், பெரியாங்குப்பம் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுப்பணி துறை சாா்பில், 100 மாணவிகள் தங்குவதற்கான விடுதி கட்டப்பட உள்ளது என்றாா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.சுரேஷ்பாபு, வட்டாட்சியா் ரேவதி, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், பெரியாங்குப்பம் ஊராட்சித் தலைவா் ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.