Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் உற்சவா் சிலை மாா்ச் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதை முன்னிட்டு திங்கள்கிழமை ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகள் ஊா்வலமாக தேவலாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், ஸ்ரீ கெங்கையம்மன், துா்கையம்மன், ஐய்யப்பனுக்கு புதிய தங்கக் கவசம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து 508 திருவிளக்கு பூஜை, மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கெங்கையம்மன் கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.