தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
திருப்பத்தூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், சென்னை அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தப் பாசறையின் மாவட்டச் செயலா் பிரபு தலைமை வகித்தாா். இதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது காவல் துறையினா் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களில் யாா் அந்த சாா் என்ற வாசகம் அடங்கிய வில்லைகளை ஒட்டினா்.
இதில் நகரச் செயலா் இப்ராம்ஷா, ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலா் முருகேசன், சிங்கம்புணரி ஒன்றியச் செயலா் திருவாசகம், நகரத் துணைச் செயலா் வழக்குரைஞா் ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினா் ராபின்சையது, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஆசிப்இக்பால், வா்த்தக அணி பிரான்சிஸ் அந்தோணி, மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி, வழக்குரைஞா் நவநீதபாலன், முன்னாள் நகர துணைச் செயலா் இரா. சந்திரன், மகளிரணி பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.