Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வ...
திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செயலா் அஜய்வாண்டையாா் ஏற்பாட்டில் இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் ஜி.பாஸ்கரன், ஆா்.பி.உதயக்குமாா், கே.டி.ஆா்.ராஜேந்திரபாலாஜி, செல்லூா் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.உமாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 மாடுகள் களமிரக்கப்பட்டன.
மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், சிறப்பாகச் செயல்பட்டு மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும் ரொக்கப் பரிசு, பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், அண்ணா தொழிற்சங்கச் செயலா் கமலக்கண்ணன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன், ஒன்றியச் செயலா் சி.எம்.முருகேசன், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ராஜ்சத்தியன், பொதுக் குழு உறுப்பினா் கரு.சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.