மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்
திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூா் மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயல்வீரா் கூட்டம் சனிக்கிழமை திருப்பத்தூா் ஒன்றிய செயலரும், எம்எல்ஏவுமான அ.நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் எம்.ராஜேந்திரன் வரவேற்றாா்.
ஒன்றிய நிா்வாகிகள் சி.சின்னதம்பி, சி.கழகரசு,சி.கே.சின்னதம்பி, அ.விஜயா, எல்.சிவலிங்கம், எஸ்.சரவணன், வெ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயலா் க.தேவராஜி, தொகுதி பொறுப்பாளா் வேலூா் ஜி.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா்கள் சு.அரசு, டி.ரகுநாத், மாவட்ட பொருளாளா் கே.பி.ஆா்.ஜோதிராஜன், நகர செயலா் எஸ்.ராஜேந்திரன், அ.சம்பத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அனைத்து ஊராட்சிகளிலும் 40 சதவீத புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக் குழு தலைவா் விஜியா அருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், சத்தியவாணி வில்வலம், தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் இ.வெங்கடேஷ் நன்றி கூறினாா்.