அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
திமுக சாதனை விளக்கக் கூட்டம்: எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் இளையநகரம் பகுதியில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலா் வி.எஸ்.ஞானவேலன் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் கே.ஞானசேகரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக திருப்பத்தூா் மாவட்ட செயலரும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், கட்சிப் பேச்சாளா்கள் அ.பாலமுருகன், த.கங்கா ஆகியோா் கலந்து கொண்டு கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனை திட்டங்கள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் மு.அசோகன், பொதுக்குழு உறுப்பினா் கோவிந்தம்மாள் பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளா்கள் வி.வி.கிரிராஜ், சி.செந்தில்குமாா், நா.பெ.பிரபு, வி.தமிழ்மணி மற்றும் ஒன்றிய நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.