``என் காதல் தோல்விகளுக்கு நானே காரணம்; விரைவில் தந்தையாவேன்'' - சல்மான் கான் ஓபன...
திருப்பத்தூா் கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் கச்சேரி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தனா்.
பின்னா், ஆட்சியா் கூறியது: கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அனைத்து விடுமுறை நாள்களிலும்
விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும் என்றாா்.
இதில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் சந்திரசேகரன், காஞ்சிபுரம் கோ-ஆப்டெக்ஸ் துணை மேலாளா் தே.மோகனம், வேலூா் துணை மண்டல மேலாளா் வை.சுஜாதா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.